உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மாயமான மாணவன் கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு

மாயமான மாணவன் கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு

ஆற்காடு, மே 10ஆற்காடு அருகே, மாயமான கல்லுாரி மாணவன், கல்குவாரி குட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அரப்பாக்கம் கிராமத்தில், 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அருகே, கேட்பாரற்ற நிலையில் பைக் ஒன்று இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள், குவாரியில் எட்டி பார்த்தனர். அதில், ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார், ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.இதில், உத்தரபிரதேச மாநிலம், லக்னோ காந்தர் பகுதியை சேர்ந்த அபிஜித்சிங், 22, என்பதும், காட்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர் என்றும், சில நாட்களுக்கு முன்பு கல்லுாரி விடுதியிலிருந்து மாயமானவர் என தெரியவந்தது.ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எப்படி உயிரிழந்தார் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ