சோளிங்கர் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்
சோளிங்கர்:சோளிங்கர், யோக நரசிம்மர் கோவிலில் பராமரிப்பு பணிக்காக, ரோப் கார் சேவை, இம்மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் நிறுத்தப்படுகிறது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் மலை மீது அமைந்துள்ள யோக நரசிம்மர் கோவிலிற்கு வரும் பக்தர்கள், மலையில் படியேறி செல்ல முடியாத வயதான, கர்ப்பிணி மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோருக்காக ரோப் கார் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிக்காக, வரும் 27 மற்றும், 28ம் தேதிகளில், ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மலையில் படி வழியாக சென்று பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.