உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கொடைக்கல் கூட்டு சாலையில் வாகன நெரிசல்

கொடைக்கல் கூட்டு சாலையில் வாகன நெரிசல்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொடைக்கல் கிராமம். சோளிங்கரில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் சாலையில், ரெண்டாடி கூட்டு சாலையில் இருந்து கொடைக்கல் கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த நான்கு முனை கூட்டு சாலையில் எந்த நேரமும் வாகன நெரிசல் உள்ளது. இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ரெண்டாடி வழியாக ராணிப்பேட்டைக்கு செல்லும் வாகனங்களும், கொடைக்கல் வழியாக அரக்கோணம் செல்லும் வாகனங்களும் அதிகளவில் பயணிப்பதால், இந்த சாலை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டு சாலையில் உள்ள பயணியர் நிழற்குடையை தாண்டி பயணியர் சாலையோரத்தில் காத்திருக்கின்றனர். இதனால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் பேருந்து நிறுத்தத்தை 100 மீட்டர் துாரம் தள்ளி ஏற்படுத்தினால், நெரிசல் குறையும் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான நடவடிக்கையை நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி