உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / டூ - வீலர் பழுது நீக்குவோர் சங்கம் துவக்கம்

டூ - வீலர் பழுது நீக்குவோர் சங்கம் துவக்கம்

நெமிலி,:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார இருசக்கர வாகனம் பழுது நீக்கும் சங்கம் துவக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, நெமிலி வட்டாரத் தலைவர் சங்கரன் மாணிக்கம் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் குமார், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்து, சங்க பெயர் பலகை திறந்து வைத்தனர்.இதையடுத்து, மே தொழிலாளர் தின விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் நெமிலி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.நெமிலி வட்டார இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க செயலர் தணிகைவேலன், துணை தலைவர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை