உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்வேறு குழுக்களாக பழநிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள்

பல்வேறு குழுக்களாக பழநிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள்

வீரபாண்டி, :தைப்பொங்கலன்று பழநிமலை முருகனை தரிசிக்க, சேலம், அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். குறிப்பாக கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, உத்தமசோழபுரம், வீரபாண்டி, அதன் சுற்றுவட்டாரங்களில், 100க்கும் மேற்பட்ட பாதயாத்திரை குழுவினர், 48 நாட்களுக்கு முன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவரவர் குழுவினர், ஊர் விநாயகர், மாரியம்மன் கோவில்களில் பூஜை செய்து அன்னதானம் வழங்கி பாதயாத்திரை புறப்பட்டனர்.சேலம், அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து நேற்று மட்டும் ஏராளமான பக்தர்கள், பல்வேறு குழுக்களாக, பாதயாத்திரை சென்றதால், சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. வழி நெடுக, பக்தர்களுக்கு பழம், மோர், குளிர்பானம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்களை, பல்வேறு தரப்பினரும் வழங்கினர். ஆங்காங்கே நீர்மோர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டன. அதேபோல் ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். மேலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிக்க, பாத யாத்திரை செல்வோர், நேற்று, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.40ம் ஆண்டுபனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி, திருமுருகன் திருச்சபை பக்தர்கள், 40ம் ஆண்டு பழநி பாதயாத்திரை பயணத்தை நேற்று தொடங்கினர். குருசாமி அருள் தலைமையில் பாதயாத்திரை சென்ற பக்தர்களை, ஊர்மக்கள் வழி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை