மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
12-Mar-2025
ஊரக வளர்ச்சி அலுவலர்கள்வேலை நிறுத்த போராட்டம்ஆத்துார்:ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தை சேர்ந்த, துணை பி.டி.ஓ., விஜயகுமார் தலைமையில், 32 பேர், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடத்தை நிரப்புதல்; ஊரக வேலை திட்டத்துக்கு தனியே அலுவலர், பணியாளர்களை நியமித்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தல்; கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட வீடு பராமரிப்புக்கு தனி பணியிடம் நியமித்தல்; கிராம ஊராட்சிகளை டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பு போன்ற உத்தரவுகளை முழுமையாக ரத்து செய்தல் உள்பட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் அலுவலகம் வெறிச்சோடியது. அதேபோல் கெங்கவல்லி ஒன்றியத்தில், 22 பேர்; தலைவாசல் ஒன்றியத்தில், 19 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12-Mar-2025