உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆதாரில் பணப்பரிவர்த்தனை அஞ்சல் துறையில் அறிமுகம்

ஆதாரில் பணப்பரிவர்த்தனை அஞ்சல் துறையில் அறிமுகம்

ஆதாரில் பணப்பரிவர்த்தனை அஞ்சல் துறையில் அறிமுகம்சேலம்:சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்(பொ) அறிக்கை:அஞ்சல் துறை, வாடிக்கையாளர் வசதிக்கு காகிதமில்லா, ஆதார் அடிப்படையில் அங்கீகார செயல்முறை(கை விரல் ரேகை பதிவு) பரிவர்த்தனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர், ஆதார் கார்டை கொண்டு வந்து காட்டி, கை விரல் ரேகையை பதிவு செய்தால் போதும். புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குதல், சேமிப்பு கணக்கில் முதலீடு செய்தல், பணம் எடுத்தல் போன்ற பரிவர்த்தனையை பெறலாம். இனி, ஆதார் மூலம் இத்தகைய சேவை உடனுக்குடன் கிடைக்கும்.சேலம், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு கோட்ட தலைமை அஞ்சலகம், கோட்டத்துக்கு உட்பட்ட, 45 துணை அஞ்சலகங்களில், ஆதார் சேவை பணப்பரிவர்த்தனை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வாடிக்கையாளர் பயன்படுத்தி, காகிதமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை