களப்பயணத்தில் பூங்காவை ரசித்த மாணவர்கள்
களப்பயணத்தில் பூங்காவை ரசித்த மாணவர்கள்சேலம், : கொங்கணாபுரம் அருகே சித்ராபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், அறிவியல் களப்பயணமாக நேற்று, சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். மான், பாம்பு, பறவைகள், விலங்கினங்களை பார்த்து மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சுற்றிப்பார்த்தனர். இதையடுத்து சேலம் விமான நிலையத்துக்கு சென்றனர். அங்கு விமானங்களை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தினேஷ் செல்வராஜி, பள்ளி மேலாண் குழுவினர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.