உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.,

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.,

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.,கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே நடுவலுாரை சேர்ந்த, ஆதிதிராவிட சமுதாய மக்கள், 144 பேருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் விளையாட்டு மைதானம், மேல்நிலை தொட்டி, அங்கன்வாடி மையம், பொது நுாலகம் உள்ளிட்டவை கட்ட ஒதுக்கீடு செய்த இடத்தில், மாற்று சமுதாயத்தினர், 44 பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, வி.சி., கட்சியினர் உள்ளிட்ட மக்கள், நேற்று, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ