கோகுலம் மருத்துவமனை ஐ.சி.யு.,
சேலம்:சேலம், மெய்யனுார் சாலையில் உள்ள, ஸ்ரீகோகுலம் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவு குறித்து, அதன் மேலாண் இயக்குனர் அர்த்தநாரி அறிக்கை:தீவிர சிகிச்சை பிரிவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ பிரிவு. இங்கு அனுபவமிக்க பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், சுவாச சிகிச்சையாளர்கள், பணியாளர்கள், 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றனர்.மூளை சம்பந்தப்பட்ட வியாதி, இருதய, நுரையீரல் செயலிழப்புகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள், கடும் தொற்று வியாதிகள், பெரிய அளவில் விபத்து காயங்கள், அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிக்கல், நச்சு பாதிப்பு, சர்க்கரை வியாதியால் ஏற்படும் உறுப்பு செயலிழப்பு போன்ற நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதே, இந்த பிரிவின் முதன்மை நோக்கம். மேம்பட்ட தொழில்நுட்பம், கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகளுக்கு உயரிய பராமரிப்பு வழங்க முடியும்.சிறப்பம்சமாக, இருதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்கும் கருவிகள், செயற்கை சுவாச கருவிகள், ரத்த சுத்திகரிப்பு, பேஸ்மேக்கர் வசதிகள், எக்கோ, ஐ.ஏ.பி.பி., உள்ளிட்ட கருவிகள், அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவ குழு உள்ளன. இங்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம், நோயாளிகள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகின்றன. தொடர்புக்கு, 0427 - 2555000 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.