உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கை

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கை

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கைசேலம்:மேட்டூர், சின்னதண்டா பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடந்த, 'என்கவுன்டர், கைது' ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதில், 189 பேரிடம் விசாரித்து, 2007ல், 89 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து, 10 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், 3 கோடி மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆணைய விசாரணையின்போது, ஊரை விட்டு வெளியே சென்றவர்கள், போதிய ஆதாரம் இல்லாதவர்கள் என பலரும் விடுபட்டுள்ளனர். மீண்டும் முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை