உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்சேலம்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில நிர்வாகிகளிடம், அநாகரிகமாக நடந்து கொண்டதாக, பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து, நேற்று முன்தினம் தமிழகம் முழுதும் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறைக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வட்ட அளவில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் மைய தாலுகா சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.அதில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் திருவரங்கன், செயலர் சுரேஷ், பொருளாளர் சண்முகம் பங்கேற்றனர். மாவட்டத்தில், 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ