உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் பறித்த சிறுவர்கள் கைது

மொபைல் பறித்த சிறுவர்கள் கைது

சேலம், திருவண்ணாமலை மாவட்டம் பூதாமங்கலம், ஆனந்தலை சேர்ந்தவர் அப்துல் காதர், 57. இவர், சேலம், கிச்சிப்பாளையம், காந்தி பஜாரில் உள்ள லாட்ஜில் தங்கி, டவுனில் உள்ள ஹோட்டலில் சர்வராக வேலை செய்கிறார். கடந்த மாதம், 30ல் பணி முடிந்து, இரவு காந்திபஜார் 2வது தெருவில் நடந்து சென்றபோது, 6 பேர் கும்பல், அவரை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டினர். தொடர்ந்து அவரை தாக்கிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டினர். பின், அவரிடம், 550 ரூபாய், மொபைல் போனை பறித்து தப்பினர். காயம் அடைந்த அப்துல் காதர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, கிச்சிப்பாளையம், ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகரை சேர்ந்த ராகுல்காந்தி, 19, மற்றும் 18 வயதுக்குட்பட்ட, 5 சிறுவர்களை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ