சட்ட நுணுக்கங்கள்மாணவர்களுக்கு பயிற்சி
சட்ட நுணுக்கங்கள்மாணவர்களுக்கு பயிற்சிசேலம்:சீரகாபாடி அருகே சேலம் அரசு சட்டக்கல்லுாரியில், 3, 5ம் ஆண்டு மாணவர்களுக்கு, தேசிய அளவில் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. முதல்வர் துர்காலட்சுமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு - புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு உறுப்பினர் அய்யப்பமணி, சட்ட நுணுக்கங்கள் குறித்து விளக்கம் அளித்தார். சேலம் மத்திய சட்ட கல்லுாரி முதல்வர் பேகம் பாத்திமா, கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலை இணை பேராசிரியர் அனிஷ் பிள்ளை, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மும்தாஜ் சூர்யா ஆகியோர், செயற்கை நுண்ணறிவு, அரசியலமைப்பு உரிமைகள், நெறிமுறைகள், ஆளுமையின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தனர்.