உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க.,வினர்துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க.,வினர்துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க.,வினர்துண்டு பிரசுரம் வழங்கல்சேலம்:சேலம் மாநகர் மாவட்ட அஸ்தம்பட்டி பகுதி, அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம், அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு தலைமை வகித்து, காய்கறி வியாபாரிகள், மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், ஸ்டாலின் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட்; அ.தி.மு.க.,வின் சாதனைகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பகுதி செயலர்கள் குமார், உமாசங்கர், பிரகாஷ், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை