பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர் சேவை மாதம்
பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர் சேவை மாதம்சேலம்:சேலம் பி.எஸ்.என்.எல்., இணை பொது மேலாளர் சுபா அறிக்கை: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த, பி.எஸ்.என்.எல்., சார்பில், ஏப்., 1 முதல், 30 வரை, வாடிக்கையாளர் சேவை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் சேவை குறைபாடுகளை தீர்ப்பது, 'நெட்வொர்க்' தரத்தை மேம்படுத்துவது, வாடிக்கையாளர் தொடர்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவற்றில் கவனம்செலுத்தப்படுகிறது.எப்.டி.டி.ஹெச்., புது சிம், எம்.என்.பி., சிம் அப்கிரேடு செய்து வழங்கல், பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வது ஆகியவையும் மேற்கொள்ளப்படும். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், https://cfp.bsnl.co.in/ என்ற இணையதளத்தில் புகார்கள், சேவை கோரிக்கை, ஆலோசனை, பரிந்துரை, கருத்துகளை பதிவு செய்யலாம்.