உள்ளூர் செய்திகள்

தீ மிதி விழா

ஓமலுார் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் குந்தி தேவியாரின் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, அரவான் சிசு வைத்தல், சக்தி கரகம் அழைப்பு, தபசு மரம் ஏறுதல், மாடுபிடி சண்டை, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி திருவீதி உலா, தர்மராஜர் பட்டாபிேஷகம், நாளை போர் மன்னன் காவு பிடித்தல், அர்ச்சுனன், திரவுபதி அம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை