உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்பேத்கர் விருதுக்குவிண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் விருதுக்குவிண்ணப்பிக்கலாம்

சேலம் :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோரில் சிறந்தோருக்கு திருவள்ளுவர் நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், 'டாக்டர் அம்பேத்கர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி, 2025 - 26ல், தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற, சேலம் மாவட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 109ல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தொண்டு ஆற்றியதற்கான தகுந்த ஆவணங்களை இணைத்து வரும், 12 மதியம், 3:00 மணிக்குள் நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !