மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு பயிலரங்கம்
29-Aug-2024
பனமரத்துப்பட்டி: தி.மு.க.,வின், பனமரத்துப்பட்டி ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். அதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசியதா-வது:ஒரு காலை நாளிதழில் செய்தி படித்தேன். அதில், 'வரும் சட்ட-சபை தேர்தலில் வீரபாண்டி தொகுதியில், 50,000 ஓட்டுகள் அதிகம் வாங்கி வெற்றி பெறுவோம்' என, அ.தி.மு.க., மாவட்ட செயலர் சொல்லியுள்ளார். நான் சவால் விடுகிறேன். வீரபாண்டி தொகுதியில், முதல்வர் ஸ்டாலின், யாரை கை காட்டுகிறாரோ, அந்த தி.மு.க., வேட்பாளர்தான் வெற்றி பெறுவார். இல்லை-யெனில் இந்த சிவலிங்கம் பதவியை விட்டு விலக தயார். அர-சிலில் இருந்தும் விலக தயார். நீங்கள் தயாரா?இவ்வாறு அவர் பேசினார். துணை செயலர் சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் தருண் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.
29-Aug-2024