போலி ஆவணங்கள் பயன்படுத்தி சேலத்தில் பணிபுரிந்த வங்கதேசத்தை சேர்ந்த தம்பதி உட்பட 12 பேர் கைது
சேலம்: சேலத்தில், போலி ஆவணங்களை பயன்படுத்தி பணிபுரிந்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் கன்னங்குறிச்சி அருகே, கோம்பைக்காடு பகுதியில், 'அப்ரேல் கிங்டம் கம்பெனி' என்ற பெயரில், ஸ்வெட்டர் தயா-ரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர், போலிஆவணங்கள் மூலம் சட்டவிரோத-மாக தங்கியிருந்து, பணி செய்து வருவதாக மாநகர போலீஸ் கமி-ஷனர் அனில்குமார் கிரிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, துணை கமிஷனர் கேல்கர் சுப்ரமணிய பாலசந்-தரா, உதவி கமிஷனர் ரமாலி ராமலட்சுமி உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார், கோம்பைகாட்டில் உள்ள அந்-நிறுவனத்திற்கு நேற்று சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த கம்பெனி மேலாளர் ரீகனிடம் விசாரணை நடத்தினர்.அப்போது வங்கதேசத்தை சேர்ந்த, 12 பேர் போலி ஆவ-ணங்கள் மூலம் பணி புரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சட்டவிரோதமாக, அந்த நாட்டில் இருந்து சேலத்திற்கு வந்து குடியுரிமை பெறாமல், தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தம்பதி உட்பட, 12 பேரை போலீசார் கைது செய்-தனர். வங்கதேச நாட்டை சேர்ந்த மஸாரூல், 37, ரஷிப் முல்லா ேஷக், 23, இவரது மனைவி லப்பி அக்தர் சுமி, 22, மற்றும் பைசால், 30, நஸ்ரூல் இஸ்லாம், 35, முகம்மது கசிம், 35, முகம்-மது அபி யூசப் இஸ்லாம், 25, பர்கத் அலி, 38, முகம்மது அயின், 36, முகம்மது ரஷிர், 30, நஜ்முல் உசேன், 40, ரபிக் கூல் இஸ்லாம், 37, ஆகிய, 12 பேரையும் சூரமங்கலம், அய்யனார் கோவில் அருகே உள்ள அப்பார்மென்டில் யாருக்கும் தெரியாத அளவிற்கு, மேலாளர் ரீகன் தங்க வைத்திருந்ததும், அங்கிருந்து அவர்கள் தினமும் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்-ளது.வங்கதேச நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்ல இவர்களுக்கு தலைவனாக மஸாரூல் என்பவர் செயல்பட்டதும், இவர் கண்காணிப்பாளராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட, 12 பேரையும், ஆத்துாரில் உள்ள வங்கதேச முகாமில், தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,' கைது செய்-யப்பட்டவர்கள் சேலத்தில் கடந்த, 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும், அவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு ஆகியவை சட்ட விரோத-மாக போலியாக தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்று வேறு எந்த நிறுவனத்திலாவது, வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இந்நிறுவனத்தில் 2 ஆண்டுக்கு முன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலாளர் ரீகனுக்கு வங்கதேச நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.