வார்பிங், சைசிங் தொழிலாளர்களுக்கு 12 சதவீதம் போனஸ்
ஈரோடு, வார்பிங், சைசிங் தொழிலாளர்களுக்கு, 12 சதவீத போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட வார்பிங், சைசிங் தொழிலாளர்கள் சங்கத்தின் போனஸ் பேச்சுவார்த்தை, உரிமையாளர்கள் தரப்புடன், சங்க தலைவர் ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் நடந்தது.இரு தரப்பு பேச்சுவார்த்தையில், 12 சதவீத போனஸ் வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வரும், 18 அன்று வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. சங்க செயலர் செல்வம், துணைத் தலைவர் மாணிக்கம், துணை செயலர் ரவிசந்திரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் பிரபாகரன், மாவட்ட துணை செயலர் கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.