உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊராட்சி முன்னாள் தலைவியின் கணவரை தாக்கிய 2 பேர் கைது

ஊராட்சி முன்னாள் தலைவியின் கணவரை தாக்கிய 2 பேர் கைது

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே பழனியாபுரியில், பச்சையம்மன், ராயதுரை கோவில்கள் உள்ளன. அங்கு திருவிழா முறையாக நடத்தப்படாததால், அதே பகுதியை சேர்ந்த முனியன், 60, என்பவர், கோவிலின், 35 பவுன் நகைகளை அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தினார். தவிர, அவர் கோவில் விழா குறித்து பேசும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.இந்நிலையில் கடந்த, 1 இரவு, 7:10 மணிக்கு, தனியார் பால் கொள்முதல் நிலையத்துக்கு முனியன் சென்றபோது, அங்கிருந்த சிலர் தாக்கியுள்ளனர். அதை தடுக்க முயன்ற அவரது தாய் தைலம்மாள், 75, என்பவரும் தாக்கப்பட்டார். இவர்கள் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.முனியனின் மனைவியான, ஊராட்சி முன்னாள் தலைவி அமுதா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜபாண்டி, 49, முத்தரசன், 19, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். தவிர, க.வரதராஜ், செ.வரதராஜ், பாலமுருகன், மோகன் மீது வழக்குப்பதிந்து, அவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை