உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்23வது ஆண்டு விழா கொண்டாட்டம்

மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்23வது ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆத்துார், ஆத்துாரில் உள்ள மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 23வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழா குழு தலைவர் மணி தலைமை வகித்தார். அதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரம், பேச்சாளர் ஜெகன், தன்னார்வ அமைப்பு நிர்வாகி ராஜா பேசினர். பள்ளி செயலர் ரதிதேவி, இணை செயலர் நிரேஷ்ராஜ், பொருளாளர் யோகேஷ் ராஜ், முதல்வர் சுகுணா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !