மேலும் செய்திகள்
தேசிய தடகள போட்டி யில் கோவை போலீசுக்கு தங்கம்
26-Jun-2026
சேலம்:சென்னை அருகே மாங்காடு, அம்மாள் நகரை சேர்ந்தவர் கவுதமி, 28. இவரது தாய் வித்யா. இவர்கள் கடந்த, 25ல், சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் நித்யாவதி வீட்டுக்கு வந்தனர். அங்கு கவுதமி துாங்கும்போது, அவர் அணிந்திருந்த, 3.5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி, ஒரு டப்பாவில் போட்டு, அவரது பையில் வைத்திருந்தார். கடந்த, 28ல் கவுதமி, வித்யா ஆகியோர், வீட்டுக்கு சென்றனர். நேற்று முன்தினம் காலை கவுதமி, அவரது பையில் இருந்த டப்பாவை பார்த்தபோது, தாலி சங்கிலி இல்லை. அதிர்ச்சியடைந்த அவர், நேற்று அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். குறிப்பாக அவர் தங்கியிருந்த உறவினர் வீட்டிலேயே விசாரிக்கின்றனர்.
26-Jun-2026