உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி விருது பெற்றதற்கு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி விருது பெற்றதற்கு பாராட்டு விழா

சேலம், சேலம் வரலாற்று சங்கத்தின் ஐம்பெரும் விழா, அஸ்தம்பட்டி பாலர் ஞான இல்லத்தில் கொண்டாடப்பட்டது.சங்கத்தின், 18ம் ஆண்டு விழாவிற்கு தலைவர் இம்மானுவேல் ஜெய்சிங் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜே.பர்னபாஸ் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை வாசித்தார். 80 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பொறியாளர் ராம.அருணாசலம், தமிழறிஞர் அரங்கசாமி உள்பட, 10 பேர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்திய அரசின் விமான படையில் இருந்து ஓய்வு பெற்று, மத்திய அரசின் ஆட்டோ ஜெனரியன் விருது பெற்ற இம்மானுவேல் ஜெய்சிங்கை பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. சங்கத்தின் செயல் தலைவர் தாரை.குமரவேலு பேசியதாவது:தலைவர் இம்மானு வேல் ஜெய்சிங், 37 ஆண்டுகள் நாட்டின் விமானப் படையில் இருந்து சீனா, பாகிஸ்தான் போன்ற போர்களில் நேரடியாக பங்கேற்று, சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்,'' என்றார். நிகழ்ச்சியில் பாபு, இலா.வின்சென்ட், கர்லின் எபி, பேராசிரியர்கள் ஸ்ரீதர், கோவிந்த ராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை