உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முயல் வேட்டையில்ஈடுபட்டால் நடவடிக்கை

முயல் வேட்டையில்ஈடுபட்டால் நடவடிக்கை

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில், சித்திரை, வைகாசி மாதங்களில் சில ஊர்களில் நடத்தப்படும் கோவில் திருவிழாக்களில் முயல் வேட்டை நிகழ்ச்சி நடத்தப்படும். அதற்கு வனப்பகுதிக்கு சென்று முயல்களை பிடித்து வந்து திருவிழா நடத்துவர்.இதுகுறித்து ஆத்துார், கெங்கவல்லி வனத்துறையினர் கூறுகையில், 'சட்டப்படி விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றம். முயல் வேட்டையை தடுக்க, வனத்துறையில் குழுக்கள் அமைத்து, ரோந்து பணி மேற்கொள்கின்றனர். முயல் வேட்டையில் ஈடுபடுபவர்களை பிடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !