உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

சேலம் :வாலிபர் கொலை வழக்கில் ஏற்கனவே, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் வேடுகத்தாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 20, கடந்த 16ல், கோஷ்டி மோதல் காரணமாக, ஒரு கும்பல் இவரை கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 சிறுவர்கள் உள்பட 14 பேர் கொண்ட கும்பலை, கைது செய்துள்ளனர்.இதில், தலைமறைவாக இருந்த, இனாம்வேடுகத்தாம்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜீவா, 21, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில், மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி