உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் கஞ்சா கடத்தல் அரூர் வாலிபர் சிக்கினார்

பைக்கில் கஞ்சா கடத்தல் அரூர் வாலிபர் சிக்கினார்

கருமந்துறை, கருமந்துறை போலீசார், கிளாக்காடு வனத்துறை சோதனைச்சாவடி அருகே, கருமந்துறை - வில்வனுார் சாலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியே, ஸ்பிளண்டர் பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அவரது பைக் கவரில், இரு பிளாஸ்டிக் பொட்டலங்களில், 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில், தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்த கதிர்வேல், 32, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சாவை, பைக்குடன் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை