உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவரின் படிப்புக்கு அட்மா சங்கம் உதவி

மாணவரின் படிப்புக்கு அட்மா சங்கம் உதவி

பனமரத்துப்பட்டி: சேலம், ஆணையம்பட்டியை சேர்ந்த, பெற்றோரை இழந்த மாண-வருக்கு, ஆத்துார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது. அக்கல்லுாரி நிர்வாகம், 50 சதவீத கட்டண சலுகை வழங்க ஒப்புக்கொண்டது. தொடர்ந்து சேலம் கலெக்டர் வழிகாட்டுதல்படி, கல்லுாரி கனவு திட்டத்தில், தமிழக வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) சேலம் மாவட்ட சங்கத்தினர், அந்த மாணவரின், 4 ஆண்டு கல்வி கட்டணம், 1.6 லட்சம் ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டனர். கடந்த, 3ல், கலெக்டர் இளம் பகவத் தலைமையில் முதலாம் ஆண்டு கல்வி உதவித்தொகை, 40,000 ரூபாயை, அட்மா சங்க அலுவ-லர்கள் வழங்கினர். மாவட்ட வேளாண் அதிகாரிகள், 'அட்மா' சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ