உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் இருந்து விழுந்து சுயநினைவு இழந்த மாணவி கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்ற காதலன் கைது

பைக்கில் இருந்து விழுந்து சுயநினைவு இழந்த மாணவி கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்ற காதலன் கைது

ஆத்துார், பைக்கில் சென்றபோது, கல்லுாரி மாணவி விழுந்து படுகாயம் அடைந்ததில் சுய நினைவு இழந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், மாணவியை வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்துச்சென்ற அவரது காதலனை, கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த தர்மலிங்கம் மகள் கவியரசி, 19. சேலம் அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். நாவக்குறிச்சியை சேர்ந்த, பழனி மகன் வினோத், 20. ஐ.டி.ஐ., படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'ஏசி' மெக்கானிக்காக பணிபுரிகிறார். இருவரும் காதலித்தனர். அடிக்கடி சண்டை போட்டு பேசாமலும் இருந்து வந்தனர்.இந்நிலையில் நேற்று கல்லுாரிக்கு செல்ல, ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்த கவியரசியை, பைக்கில் ஏறும்படி வினோத் அழைத்துள்ளார். அவர் மறுத்துள்ளார். உடனே அவரது மொபைல் போனை பிடுங்கிய வினோத், அவரது பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் வினோத்துடன் பைக்கில் ஏறி, மாணவி சென்றார்.கடைவீதி வழியே, ஆத்துார் புறவழிச்சாலை, சர்வீஸ் சாலையில் சென்றபோது, தனியார் பள்ளி எதிரே, மாணவி விழுந்துள்ளார். மக்கள் உதவியுடன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சுய நினைவு இழந்து, ஆபத்தான நிலையில் உள்ளார். இதனால் பைக்கில் இருந்து தவறி விழுந்தாரா, பைக்கில் இருந்து தள்ளிவிட்டதில் சுய நினைவு இழந்தாரா என, ஆத்துார் டவுன் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து மாணவியுடன், பஸ்சில் செல்வதற்காக காத்திருந்த பிற மாணவியரிடம், போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, மாணவியை வழிமறித்து கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று விபத்து ஏற்படுத்தியதாக, வினோத் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை