உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலத்தில் கேமரா

பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலத்தில் கேமரா

பனமரத்துப்பட்டி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவு பகுதியில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை சந்திப்புகளில், மல்லுார் போலீசார் கேமரா வைத்தனர். வழியோரங்களில் விபத்தை ஏற்படுத்தும் வெளியூர் வாகனங்கள், மேம்பாலத்தின் வழியே செல்கின்றன. இதனால் தற்போது, மேம்பாலத்தின் மீதும் கேமரா வைத்து வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி