தரண் குழுமம் சார்பில் 2ம் ஆண்டாக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்
சேலம்: சேலம், தரண் குழுமம் சார்பில், 2ம் ஆண்டு புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான், 'தி ரன்', பனமரத்துப்பட்டியில் உள்ள, தரண் நர்சிங் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல், ஏ.எஸ்.பி., சுபாஷ் சந்த் மீனா முறையே, 6, 10 கி.மீ., ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக, எஸ்.கே.எஸ்.மருத்துவமனை இயக்குனர் சுரேஷ், நடிகர் தர்ஷன் இணைந்து, 21.1 கி.மீ., ஓட்டத்தை தொடங்கிவைத்தனர். 3,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்வராஜா, துணை நிர்வாக இயக்குனர் குணசேகரன் கூறியதாவது:புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, மக்களிடையே சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், மாரத்தான் நடந்தது. இதன் முக்கிய அம்சமாக, இலவசமாக கூப்பன் வழங்கி, பெண்களுக்குரிய மார்பக புற்றுநோய்க்கான, 'மெமோகிராம்', கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, 'பாப்ஸ்மியர்' பரிசோதனை, தரண் மருத்துவமனையில் செய்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், அரசு, தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், பிரபல கல்லுாரி உரிமையாளர்கள், விளையாட்டு குழுவினர், சங்கத்தினர் பங்கேற்றனர்.