உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை, தன்பாத்திலிருந்து, ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்றது. அதை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். இதில், பொதுபெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு டிராவல் பேக்கை சோதனை செய்ததில், 5.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்த பேக்கிற்கு யாரும் உரிமை கோராததால், அதை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்தது யாரென விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ