உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார்டுதாரர்கள் சாலை மறியல்: ரேஷன்கடை ஊழியர் சஸ்பெண்ட்

கார்டுதாரர்கள் சாலை மறியல்: ரேஷன்கடை ஊழியர் சஸ்பெண்ட்

மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார் காவேரி புரம் ஊராட்சி செட்டிப்பட்டி - 1 ரேஷன் கடையில், 951 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடை விற்பனையாளர் ரங்கசாமி. காவேரிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் பிரியதர்சினி கணவர். கடையில் நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் வினியோகிக்காத நிலையில், கார்டுதாரர்கள் பலருக்கு வினியோகித்ததாக, மொபைல் போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டுதாரர்கள், மேட்டூர் -மைசூரு நெடுஞ்சாலையில் கோவிந்தபாடி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்த ரங்கசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, காவேரிபுரம் கூட்டுறவு கடன் சங்க செயல் ஆட்சியர் சுப்ரமணியன் நேற்று உத்தரவிட்டார். தகுதியான கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ