உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுார் கோட்டத்தில் மின் பிரிவு எண்கள் மாற்றம்

ஓமலுார் கோட்டத்தில் மின் பிரிவு எண்கள் மாற்றம்

சேலம், ஓமலுார் மின் செயற்பொறியாளர் உமாராணி அறிக்கை:ஓமலுார் கோட்டத்தில் வெள்ளார், தீவட்டிப்பட்டி, சின்னதிருப்பதி ஆகிய பிரிவு அலுவலகங்களில் இருந்து, சில பகிர்மானங்களை பிரித்து, புதிதாக தொப்பூர் பிரிவு அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின் பகிர்மான எண், பிரிவு அலுவலக எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வெள்ளாளர் பிரிவில், சந்திரநல்லுார், செக்காரப்பட்டி, வெள்ளப்பம்பட்டி, உம்மியம்பட்டி; தீவட்டிப்பட்டி பிரிவு அலுவலகத்தில் குண்டுக்கல்; சின்னதிருப்பதி பிரிவு அலுவலகத்தில் கொட்டாலுார் புதுார் ஆகிய பகிர்மான எண்கள் மாற்றப்பட்டுள்ளன. காடையாம்பட்டி பிரிவு அலுவலகத்தின் நடுப்பட்டி, தீவட்டிப்பட்டி பிரிவில் உள்ள மாட்டுக்காரன்புதுார் பகிர்மான எண்களும் மாற்றப்பட்டுள்ளன. அதனால் இந்த பகிர்மானங்களை சேர்ந்த நுகர்வோர், மின் இணைப்பு எண், பகிர்மான எண், பிரிவு அலுவலக எண் மற்றும் மின் இணைப்பு உரிமையாளர் பெயர் ஆகியவற்றை சரிபார்த்து, மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக உதவி பொறியாளரை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !