முதல்வர் கோப்பை போட்டி சேலம் மாவட்டம் 4ம் இடம்
சேலம், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மக்கள், மாற்றுத்திறனாளிகள் என, 5 பிரிவாக நடக்கிறது. நடப்பாண்டு போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. அதில், சென்னை மாவட்டம், 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலம் என, 281 பதக்கங்களுடன், மாநில அளவில் முதலிடம் பிடித்தது.அதேபோல், 36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலத்துடன், 88 பதங்கங்களை பெற்ற செங்கல்பட்டு, 2ம் இடம்; 33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலத்துடன், 95 பதக்கங்கள் பெற்ற, கோவை, 3ம் இடம், 16 தங்கம், 10 வெள்ளி, 22 வெண்கலத்துடன், 48 பதக்கங்களை பெற்ற, சேலம், 4ம் இடத்தை பிடித்தன.