ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க தொடரும் தடை
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் முட்டல் கிராமம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது.அங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. கடந்த, 4 முதல், கல்வரா-யன்மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால், ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 8 முதல், அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து மழையால், நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதனால், 12ம் நாளான நேற்றும் தடை தொடர்ந்தது.