மாடு திருடன் சிக்கினான்
சேலம்:சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனி, மாரியப்பன் நகர் காட்டுவளவை சேர்ந்த விவசாயி ஜெயராமன், 68. இவர் வீடு அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று காலை, ஒருவர், அங்கிருந்த மாடுகளை திருடிச்சென்றார். அதை விவசாயி பார்த்து, விரட்டி சென்று, அந்த நபரை பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நபர், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, அண்ணா நகரை சேர்ந்த அப்துல்சுபான், 40, என்பதும், மாடுகளை திருடியதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.