உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / . ராகவேந்திரா பள்ளியில் பக்தி இசை நிகழ்ச்சி

. ராகவேந்திரா பள்ளியில் பக்தி இசை நிகழ்ச்சி

மேச்சேரி; மேச்சேரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளியில், 'டிவி' புகழ் கந்தன் கண்மணி செல்வி தியாவின், பக்தி பாட்டு நிகழ்ச்சி நேற்று முன்-தினம் நடந்தது. இது தியாவின், 148-வது மேடை நிகழ்ச்சி. 2 மணி நேரத்துக்கு மேல் நடந்த நிகழ்ச்சியில், 'வேல் வேல் முருகா, திருப்புகழ்' உள்ளிட்ட முருகன் பாடல்களை பாடி, மாணவர்கள், பெற்றோர், மக்-களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார். முன்னதாக பள்ளி தலைவர் மணிவண்ணன், தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார். அப்போது அவர், 'இசையின் மூலம் மாணவர்களிடம் பக்தி, பண்பாட்டை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்' என்றார். பள்ளி நிர்வாக இயக்குனர் கவுசல்யா, துணைத்த-லைவர் சுகன்ராஜ், முதல்வர் வனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை