உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய்கள் கருத்தடை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

நாய்கள் கருத்தடை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

சேலம்: சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் செயல்பட்டு வரும், நாய்கள் கருத்தடை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் வாய்க்கால்பட்டறையில், மாநகராட்சி சார்பில் நாய்களுக்-கான கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பகுதி-களில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, குணமாகும் வரை வைத்திருந்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது. சிகிச்சையின் போது, சில நாய்கள் தப்பித்து, அப்பகுதி மக்களை கடித்து வருவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில், நேற்று கருத்தடை மையத்துக்கு எதிர்ப்பு தெரி-வித்து, அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், வாய்க்-கால்பட்டறை சந்திப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கவுன்-சிலர் தெய்வலிங்கம், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் முருகராஜா ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தி, அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கருத்தடை மையத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்து நாய்கள் தப்பிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை