மேலும் செய்திகள்
சாலையில் தவறவிட்ட பணம் போலீசில் ஒப்படைப்பு
15-Aug-2025
இடைப்பாடி, இடைப்பாடி, கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜன், 56. இடைப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக உள்ளார். நேற்று மாலை, குழந்தைகளை இறக்கி விட்டு வேனை ஓட்டியபடி வந்துகொண்டிருந்தார். மொரசப்பட்டி போஸ்ட் ஆபீஸ் அருகே வந்தபோது, சாலையில் பணம் கிடந்ததை பார்த்தார். உடனே வாகனத்தை நிறுத்திப்போய் பார்த்தபோது, 20,900 ரூபாய் இருந்தது. உடனே அவர், பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து, பணத்தை ஒப்படைத்தார். விசாரணையில் அந்த பணம், மொரசப்பட்டியை சேர்ந்த மணிகண்டனுடையது என தெரியவந்தது. பின் டிரைவரே, போலீஸ் முன்னிலையில், உரியவரிடம் ஒப்படைத்தார். டிரைவரை, போலீசார் பாராட்டினர்.
15-Aug-2025