விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
சேலம், சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கல்வியாளர் பர்வீன் சுல்தானா, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்படி பேசி வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மீனாட்சி சுந்தரம் பேசினார். துணை மருத்துவ இயக்குனர் அசோக், முதியோர் மருத்துவ பிரிவு ஆலோசகர் பிரபாகரன் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள், கல்லுாரி அனுபவங்கள், செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியைகள் தமிழ் சுடர், கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.