மாஜி படை வீரர்களுக்கு இலவச சட்ட உதவி மையம்
சேலம், சேலம் மாவட்டத்தில், முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோருக்கு சட்டம் சார்ந்த உதவிகளை இலவசமாக வழங்க, கலெக்டர் அலுவலக அறை எண்: 12ல், சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் நியமிக்கப்படும்வக்கீல் ஒருவர், வெள்ளிதோறும் வருவார். சட்ட உதவி தேவைப்படும் முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர், இந்த மையத்தை அணுகி பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.