உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கெங்கவல்லி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி, கெங்கவல்லி தாலுகா அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கெங்-கவல்லி வட்ட கிளை துணைத்தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல்; காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர். வருவாய், ஊரக வளர்ச்சித்துறை-யினர் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். அதேபோல் சேலம், கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி