கோலிக்குண்டு வண்டுகளால் மலைக்கிராம மக்கள் அச்சம்
கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை பகுதியான கரியகோவில், செம்பருக்கை, கோவில்புத்துார், செங்காட்டுபுதுார் ஆகிய கிராமங்களில், தலா, 100 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. அப்பகுதிகளில் சில நாட்களாக, வீடுகளின் உட்புறம், மேற்கூரை, மரம், செடிகளில் கறுப்பு நிறுத்தில், கோலிக்குண்டுகள் போன்று, வண்டுகள் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ளன. உணவு பாத்திரங்களில் வண்டுகள் விழுவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.இதை அறிந்து, கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள், அங்கு சென்று வண்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து மக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.