மேலும் செய்திகள்
ஏரியில் குழந்தைகளுடன் குதித்து தாய் தற்கொலை
07-Jun-2025
மேட்டூர், பிரிந்து சென்ற கணவர், திடீரென வீட்டுக்கு வந்து, மனைவியின் கால்களை கட்டிப்போட்டு, பாலியல் தொல்லை கொடுத்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம் மேச்சேரி, பள்ளிப்பட்டி ஊராட்சி வெடிக்காரனுாரை சேர்ந்த, விவசாயி கோவிந்தன், 60. இவரது மனைவி செல்வாம்பாள், 55. இருவருக்கும், 35 ஆண்டுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, 3 மகள்கள். கடைசி மகள், 4 மாத வயிற்றில் இருந்தபோது, கோவிந்தன், மனைவியை பிரிந்து சென்று, மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தினார். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் நடு மகள் லாவண்யாவுக்கு, அவரது கணவருடன் ஏற்பட்ட தகராறால், கடந்த மார்ச் முதல், செல்வாம்பாளுடன் வசிக்கிறார்.இந்நிலையில் கடந்த, 15 இரவு, 11:00 மணிக்கு செல்வாம்பாள் வீட்டுக்குள்ளும், லாவண்யா வெளியேயும் கட்டிலில் படுத்திருந்தனர். அப்போது அங்கு சென்ற கோவிந்தன், மகளுடன் தகராறு செய்து, வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். தொடர்ந்து அங்கு துாங்கி கொண்டிருந்த செல்வாம்பாள் கால்களை, கயிற்றில் கட்டிப்போட்டு, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். செல்வாம்பாள் துடித்ததால், அதிர்ச்சி அடைந்த கோவிந்தன், அங்கிருந்து ஓடிவிட்டார். உடல் நிலை பாதிக்கப்பட்ட செல்வாம்பாளை, உடனே மகள் லாவண்யா மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து நேற்று செல்வாம்பாள் அளித்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jun-2025