உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராமாயணத்தை படித்தால் வாழ்க்கையில் வீழ்ச்சி கிடையாது

ராமாயணத்தை படித்தால் வாழ்க்கையில் வீழ்ச்சி கிடையாது

சேலம்: சேலத்தில், 52வது ஆண்டு கம்பன் விழா, நேற்று தொடங்கியது. கம்பன் கழக தலைவர் சுதர்சனம் தலைமை வகித்தார். அதில், 'இன்னொரு கம்பன் வருவானோ' தலைப்பில், புலவர் ராம-லிங்கம் பேசியதாவது: வாழ்வியலை அடிப்படையாக கொண்டது ராமாயணம். 6 காண்ட-மாக உள்ள ராமாயண காவியத்தில் தெளிவு பெற்றால் எத்தகைய சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும். ராமாயணத்தை படித்து, நீதிப-திகள், 'நீதி பரிபாலனை' வழங்கிய நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்கான, 'வார்த்தை பலம்', 'சொல் வரமாவதும்' ராமாய-ணத்தில் உள்ளது.எண்ணங்கள் துாய்மையாக இருந்தால் வார்த்தைகள் துாய்மையாக இருக்கும் என்பதற்கு, அதனுடைய செயல் தான் ஆதாரம். சந்-தர்ப்ப, சூழ்நிலைக்கு ஏற்ப, மாறும் மனதை சமன்படுத்துவது ராமாணயம். அது, கோபத்தை நல்ல குணமாக மாற்றும் மந்திரம்; வெறும் கதை ஓட்டம் அல்ல; வாழ்வியல் உண்மை. நம் இத-யத்தை பண்படுத்தி புனிதமாக்கிவிடும். நம் பண்பாட்டை பறை-சாற்றும் ராமாயணத்தை படித்தால், வாழ்க்கையில் வீழ்ச்சி என்-பதே கிடையாது. வெற்றி தான்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரன், கம்பன் விழா போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின், 'தெய்வத்தின் தெய்வது' தலைப்பில், நாகை முகுந்தன் பேசினார். கம்பன் கழக செயலர்கள் சுசீந்திரகுமார், ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.இன்று, 'கம்பன் காப்பியத்திற்கு பெரிதும் அழகு சேர்ப்பது சொற்-களே, செயல்களே, நோக்கங்களே' தலைப்பில் விவாதம், 'கம்பன் பெரிதும் வழிகாட்டுவது வீட்டிற்கா, நாட்டிற்கா' தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை