மேலும் செய்திகள்
துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
17-Sep-2024
'சைகை' மொழி தின விழிப்புணர்வு ஊர்வலம்
28-Sep-2024
இந்திய சைகை மொழி தினவிழிப்புணர்வு ஊர்வலம்சேலம், செப். 28-சேலத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சர்வதேச காது கேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.கலெக்டர் பிருந்தாதேவி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம், வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக வந்து, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்தின் போது, சைகை மொழியை மதிப்போம், காது கேளாதோர் வாரத்தை கடைபிடிப்போம், சைகை மொழி கற்பதால் நட்பு புத்துணர்ச்சி தரும் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி சென்றனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க தலைவர் அருண், செயலர் பயோஸ்கான், சிறப்பாசிரியர் கண்ணன் உள்பட செவித்திறன் குறைபாடுடையோர் பலர் கலந்து கொண்டனர்.
17-Sep-2024
28-Sep-2024