உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுத்தையை கொன்ற வழக்கில் சிக்கியோரிடம் 5 மணி நேரம் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி

சிறுத்தையை கொன்ற வழக்கில் சிக்கியோரிடம் 5 மணி நேரம் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி

மேட்டூர்: சிறுத்தையை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை, வனத்துறை காவலில் எடுத்து விசாரிக்க, 5 மணி நேரம் அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே கடந்த, 27ல் ஒரு ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்தது. வனத்துறையினர் பரிசோதனையில் சிறுத்தை தலையில் நாட்டு துப்பாக்கி குண்டு இருப்பது தெரிந்தது. துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற, தின்னப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, 49, மீனவர் ராஜா, 54, வாழைக்காய் வியாபாரி சசிகுமார், 45, ஆகியோரை கடந்த, 31ல் மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில் சிறையில் உள்ள, 3 பேரையும், 1 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என, மேட்டூர் வனத்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் பத்மப்ரியா, 'அக்., 9 மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டும் வனத்துறையினர் விசாரிக்க வேண்டும். அப்போது அவர்கள் தரப்பு வக்கீல்கள் துரைராஜ், ராமச்சந்திரன், தியாகு உடனிருக்க வேண்டும்' என உத்தரவிட்டார். தொடர்ந்து வனத்துறையினர், 3 பேரையும், மருத்துவ பரிசோதனைக்கு பின் மாலை, 5:00 மணிக்கு, வனத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ