பஸ்சில் வழிப்பறிக்கு முயன்றவர் கைது
ஆத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலாஜி. நேற்று ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம் சென்ற அரசு பஸ்சில், பாலாஜி பயணித்தார். சிறிது துாரம் சென்றதும், அருகே பயணித்த ஒருவர், பாலாஜி பையில் இருந்து பணம் திருட முயன்றார். பாலாஜி உள்ளிட்ட பஸ்சில் இருந்தவர்கள், அவரை பிடித்து, ஆத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆத்துாரை சேர்ந்த ஹரிஹரன், 21, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஆத்துார் டவுன், தலைவாசல் ஸ்டேஷன்களில், ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.